பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிக ளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்
கோவை
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிக ளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாடு நாள் விழா
தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூட்டிய தினமான ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையொட்டி தமிழ்வளர்ச்சி துறை சார்பில் கோவை மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி காலை 10 மணி அளவில் கோவை ராஜவீதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன கூட்டரங்கில் மாணவ- மாணவி களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
கட்டுரை, பேச்சுப்போட்டி
அதில் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம்,
மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநில உருவாக்கத்தில் மா.பொ.சி., சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர் தியாகிகள், முதல் தமிழறிஞர் கலைஞர் உருவாக் கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளின் கீழ் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெறும்.
இதில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகள் பங்கேற்கலாம். அவர்கள், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம் பெற்று வரவேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.