பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசுகையில், "தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 51 அரசு தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான உணவு தயாரித்தல் தொடர்பாக 153 உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பிரதிநிதிகளுடன், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.