பவானிசாகரில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குலுக்கல் முறையில் புதிய வீடுகள் ஒப்படைப்பு
பவானிசாகரில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குலுக்கல் முறையில் புதிய வீடுகள் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு
பவானிசாகர்
பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிப்பவர்களுக்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் 12 ஏக்கரில் சுமார் 420 வீடுகள் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளன.
இந்த வீடுகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை கலெக்டர் கணேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பயனாளிகளுக்கு புதிய வீடுகளுக்கான ஆவணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story