மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு
x

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் பிஷப் சார்ஜென்ட் நுண்ணறிவு குறைபாடுள்ளோர் சிறப்பு பள்ளியில் சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்த மரியா தலைமையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுபாஷ் சந்திரன், டாக்டர்கள் முத்துக்குமார், கணேசன், உமா கல்யாணி, சுஜாதா ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டு டெங்கு அறிகுறிகள், நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள், தற்காப்பு முறைகள், அதற்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.

சிறப்பு பள்ளி தலைமையாசிரியர் திலகவதி வரவேற்றார். முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் சார்நிலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story