இடைக்கோடு பேரூராட்சியில் 2-வது நாளாக தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இடைக்கோடு பேரூராட்சியில் 2-வது நாளாக தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

இடைக்கோடு பேரூராட்சியில் 2-வது நாளாக தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் பாய் விரித்து அலுவலகத்திலேயே தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

அருமனை:

இடைக்கோடு பேரூராட்சியில் 2-வது நாளாக தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் பாய் விரித்து அலுவலகத்திலேயே தூங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

இடைக்கோடு பேரூராட்சி நிர்வாக குழு கூட்டம் தலைவி உமாதேவி தலைமையில் நடைபெற்றது. அப்போது தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் ஷாஜி, கவுன்சிலர் கிறிஸ்துதாஸ் உள்பட 8 பேர் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார்கள். இதனால் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

ஆனாலும் தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திய வண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்வதில்லை என்றும், பேரூராட்சியில் உள்ள கட்டிடத்திற்கு வர்ணம் பூசியது மற்றும் கழிவறை கட்டியதில் மதிப்பீட்டுத் தொகையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், பேரூராட்சி சார்பில் செய்யப்பட்ட சாலை பணிகள் அனைத்தும் உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரவும், பகலுமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் பாய் விரித்து கவுன்சிலர்கள் அங்கேயே படுத்து தூங்கினார்கள்.

2-வது நாளாக நீடித்தது

இந்த உள்ளிருப்பு போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story