அரசு டாக்டர்கள் 2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்


அரசு டாக்டர்கள் 2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

பெரம்பலூர்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் 2-வது நாளாக நேற்றும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். தமிழக அரசு ஆணை எண்.354-ஐ உடனடியாக மறு ஆய்வு செய்திட வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். டாக்டர்களுக்கான சேம நலநிதியை (டி.சி.எப்.) விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள அரசாணை எண்.225-ஐ ரத்து செய்திட வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, நகர்ப்புற அரசு மருத்துவமனை, வட்டார அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். மேலும் அவர்கள் வருகிற 25-ந்தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதுடன், 25-ந்தேதி சென்னையில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story