பிற்படுத்தப்பட்டோர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆயத்த ஆடையக உற்பத்தி மையம் விண்ணப்பிக்க கலெக்டர் மோகன் அறிவுரை

x

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆயத்த ஆடையக உற்பத்தி மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் 25 ஆயத்த ஆடையக உற்பத்தி மையம் 25 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு குழு வீதம் குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்தவும், தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவை பெண்கள் அமைத்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியமாகும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் குழுவிலுள்ள பயனாளிகள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப படிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியானவை தேர்வு செய்யப்பட்டு மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவைல விழுப்புரம் மாவட்ட கலெக்டா் மோகன் தொிவித்துள்ளாா்.

Next Story