விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்


விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
x

மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 44). விவசாயியான இவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது அறுந்து விழுந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சபாநாயகர் அப்பாவு, மின்சார வாரியத்தின் மூலம் நிவாரண நிதி பெற்று தருவதாக கூறியிருந்தார்.

அதன்படி ராஜ்குமாரின் மனைவி முத்துலட்சுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகையை லெப்பைகுடியிருப்பு முகாம் அலுவலகத்தில் வைத்து சபாநாயகர் அப்பாவு வழங்கினார். வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் வளனரசு, பணகுடி உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி, வள்ளியூர் நிர்வாக அலுவலர் சகாய மிச்சேல் ஜோசப், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், பழவூர் இசக்கியப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story