முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்குவிண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்குவிண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

தேனி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடந்த 23-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எனவே, இதில் கலந்துகொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்தார்.

1 More update

Related Tags :
Next Story