போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கானஎழுத்து தேர்வை 3,990 பேர் எழுதினர்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கானஎழுத்து தேர்வை 3,990 பேர் எழுதினர்
x

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 3,990 பேர் எழுதினர். 934 பேர் தேர்வுக்கு வரவில்லை என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.

நாமக்கல்

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடந்தது.

இந்த தேர்வை எழுத 4 ஆயிரத்து 924 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 3,102 ஆண்கள், 888 பெண்கள் என மொத்தம் 3,990 பேர் தேர்வை எழுதினர். விண்ணப்பம் செய்த நபர்களில் 698 ஆண்கள், 236 பெண்கள் என மொத்தம் 934 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பரிசோதனை

இந்த தேர்வு சிறப்பு இலகுபடை போலீஸ் ஐ.ஜி. முருகன் தலைமையில் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் செய்து இருந்தார். இந்த தேர்வு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் சுமார் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

முன்னதாக தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story