2022-ம் ஆண்டிற்கான பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


2022-ம் ஆண்டிற்கான பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x

2022-ம் ஆண்டிற்கான பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சில பல்கலைகளை தவிர, மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், தனியார் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் துவங்கியுள்ளன. அரசின் கவுன்சிலிங்கையும் தாமதமின்றி துவக்க வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளநிலையில் , பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

➤அனைத்து வகை கல்லூரிகளிலும் பி.எட்., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்

➤இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

➤அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர http://tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்

➤தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும்

➤சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story