நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு


நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு
x

நடப்பாண்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

விருதுநகர்

நடப்பாண்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

ஆய்வு கூட்டம்

விருதுநகர் கலை அலுவலக கூட்டு அரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி நிர்வாக துறை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையிலும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் கே. என்.நேரு கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

நிதி ஒதுக்கீடு

அதன்படி இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் என அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சிவகாசி மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் செயலர்கள் மற்றும் ஆணையர்களிடம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தங்கள் பகுதிகளில் தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் தனித்தனியாக கேட்டறியப்பட்டது.

நடப்பாண்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் மேகநாத ரெட்டி, கூடுதல் ஆட்சியர் பிரசன்ன குமார், தென்காசி எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், அசோகன், ரகுராமன், காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், நகராட்சி தலைவர்கள், ஆணையர்கள், பேரூராட்சி செயல்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story