கரூர் பயணியிடம் ரூ.10¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


கரூர் பயணியிடம் ரூ.10¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

கரூர் பயணியிடம் ரூ.10¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

சோதனை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில், அங்கிருந்து வரும் சில பயணிகள் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திருச்சியில் இருந்து துபாய் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி பவர் பேங்கில் மறைத்து, 50 ஆயிரம் சவுதி அரேபியா ரியாலை வெளிநாட்டிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

பறிமுதல்

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர், அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த கரூரை சேர்ந்த முகமது அக்பர்(வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story