வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்


வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
x

வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணையின்படி 3 மாத காலத்திற்குள் குடும்ப அட்டைகள் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் eShram இணையதளத்தில் பதிவு செய்தும் குடும்ப அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் புதியதாக குடும்ப அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தனி தாசில்தார் (குடிமைப்பொருள்), வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதில் தங்கள் பூர்வீக மாநிலத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் தனி தாசில்தார் (குடிமைப்பொருள்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களால் இருப்பிட முகவரி குறித்து களஆய்வு மேற்கொள்ளப்படும். நிரந்தரமாக வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கப்படும். தற்காலிகமாக அல்லது குறைந்த காலம் வசிக்கக்கூடிய அல்லது குடும்பத்தை பிரிந்து தனியாக வசிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் வழங்க பரிந்துரை செய்யப்படும்.

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

எனவே மத்திய அரசின் eShram இணையதளத்தில் பதிவு செய்தும் குடும்ப அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் புதியதாக குடும்ப அட்டை வேண்டி சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story