வனக்கல்லூரி மாணவி தற்கொலை
வனக்கல்லூரி மாணவி தற்கொலை
கோயம்புத்தூர்
துடியலூர்
கோவை ஆனைகட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ஆவின் பால் சொசைட்டியில் வாகன ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர்களிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் மனமடைந்த அர்ச்சனா நேற்று வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சின்னத்தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story