மனித-வனவிலங்குகள் மோதல் தடுப்பு குறித்து வனத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
மனித-வனவிலங்குகள் மோதல் தடுப்பு குறித்து வனத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
பந்தலூர்
கூடலூர் கோட்டவன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி பிதிர்காடு வனத்துறை சார்பில் உப்பட்டி பஜாரில் மனித-வனவிலங்குகள் மோதல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. வனச்சரகர் ரவி தலைமை தாங்கி தெருமுனை பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், மனித-விலங்கு மோதலை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இரவுநேரங்களில் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்தால் உடனே வனத்துறைக்கு தகவல்கொடுத்தால் விரட்டநடவடிக்கை எடுக்கப்படும். என்றார். சென்னை நாடகம் மற்றும் கலைகுழுவினர்கள் தெருமுனை நாடகம் நடித்து விழிப்புனர்வை ஏற்படுத்தினார்கள். வனவர்கள் பெல்லிக்ஸ் ஜார்ஜ், பிரவீன்சன், வனகாப்பாளர்கள் கோபு, மணி, சுரேந்திரன் மற்றும் கூடலூர் நுகர்வோர்பாதுகாப்பு மைய செயலாளர ்சிவசுப்பிரமணியம் வேட்டை தடுப்புகாவலர்களும் கலந்துகொண்டனர். பொன்னானி பாட்டவயல், நெலாக்கோட்டை, பிதிர்காடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்பட பல பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.