ஈசல் வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம்
ஈசல் வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை
தண்டராம்பட்டு
ஈசல் வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் காப்பு காட்டில் வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 பேர் தலையில் பேட்டரி லைட் மற்றும் கத்தி, கோழி ஆகியவற்றுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி கிராமத்தைச் சார்ந்த மரியதாஸ் (வயது 65), தேவசகாயம் (56), ஜேம்ஸ் என்கிற மணி (52) என்பதும், ஈசல் வேட்டையாட வந்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் 3 பேரிடம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story