வால்பாறை அருகே வரையாட்டுப்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ-ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


வால்பாறை அருகே வரையாட்டுப்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ-ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே வரையாட்டுப்பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ காட்டுத்தீ பற்றி எரிகிறது. அதனால் ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே வரையாட்டுப்பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ காட்டுத்தீ பற்றி எரிகிறது. அதனால் ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

வனப்பகுதியில் வறட்சி

வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதம் முதல் வாரம் முதலே கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகள் வனப் பகுதியில் உள்ள நீரோடைகள் ஆகியவற்றில் தண்ணீர் வற்றி வறண்டு போய் விட்டது. இதனால் வனப் பகுதியில் உள்ள மரம், செடி- கொடிகள் காய்ந்து போய் இருந்தது.

இதனால் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அக்காமலை புல்மேடு பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு தொடர்ந்து 4 நாட்கள் எரிந்தது.வால்பாறை வனச்சரக வனத்துறையினர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் காட்டுத்தீ அணைக்கப்பட்டது.

இந்த நிலையில் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடந்த மார்ச் 13-ந் தேதியிலிருந்து கனமழை பெய்தது. இதனால் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கப்பட்டது. கடந்த கடந்த 4 நாட்களாக அட்டகட்டி -பொள்ளாச்சி பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வந்தது.

3 நாட்களாக பற்றி எரிகிறது

இதனால் வால்பாறை வனச்சரக பகுதிக்கும் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கும் சேர்ந்த மிக உயர்ந்த மலைப் பகுதியான வரையாட்டுப்பாறை வனப் பகுதியில் காட்டுத்தீ கடந்த 3 நாட்களாக எரிந்து வருகிறது. மிக உயர்ந்த வனப் பகுதியாக இருப்பதாலும் கடுமையான வெயில் வாட்டி வருவதாலும் தீ எரிந்து வரக்கூடிய இடத்திற்கு செல்வதில் சிரமம் இருப்பதாலும் வால்பாறை பொள்ளாச்சி வனச்சரக வனத்துறையினர் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான இடங்களில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும் சிறிய அளவிலான தீ மட்டும் எரிந்து வருவதாக வனத் துறையினர் கூறுகின்றனர். எனினும் காட்டுத்தீயை வனத் துறையினர் காலங்கடத்தாமல் அணைப்பதற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் ஆழியாறு வனத் துறை சோதனை சாவடியில் இருந்து அட்டகட்டி வரை உள்ள மலைப் பாதை சாலையில் பயணம் செய்யக்கூடிய வால்பாறை பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீடி, சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் வால்பாறை பகுதி வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story