களக்காடு அருகே பிரண்ட மலையில் காட்டுத்தீ


களக்காடு அருகே பிரண்ட மலையில் காட்டுத்தீ
x

களக்காடு அருகே பிரண்ட மலையில் காட்டுத்தீ ஏற்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே சுப்பிரமணியபுரத்தை அடுத்துள்ள மங்கம்மாள் சாலையில் பிரண்ட மலை பொத்தைகள் உள்ளது. இந்த மலை வருவாய்த்துறையினருக்கு சொந்தமானது ஆகும். இங்கு முயல், உடும்பு, பாம்பு உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் உள்ளன. மேலும் பெருமாள்குளம், கலுங்கடி, நாங்குநேரி பகுதிகளில் சுற்றி வரும் கரடி, காட்டு பன்றிகளும் இந்த மலையில் தஞ்சமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரண்ட மலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசுவதால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த திடீர் தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. மலையில் பிடித்த தீயை கட்டுக்குள் கொண்டுவர வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story