சுங்கான்கடை மலையில் காட்டுத்தீ


சுங்கான்கடை மலையில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:15:17+05:30)

சுங்கான்கடை மலையில் காட்டுத்தீ எரிகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி, தோவாளை, சுங்கான்கடை போன்ற இடங்களில் உள்ள மலைப்பகுதியில் கோடை காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இந்தநிலையில் நாகர்கோவில் அருகில் உள்ள சுங்கான்கடை மலையில் நேற்று மாலையில் காட்டுத் தீ எரிந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இரவு நேரத்தில் தீ எரிந்ததால் நெருப்பு குழம்பு வழிந்தோடுவது போல காட்சியளித்தது. இதை சுங்கான்கடை வழியாக சாலையில் சென்றவர்கள் பார்த்து சென்றனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story