யானைகளுக்கு படையலிட்டு வழிபட்ட வனத்துறையினர்


யானைகளுக்கு படையலிட்டு வழிபட்ட வனத்துறையினர்
x

மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு படையலிட்டு வனத்துறையினர் வழிபட்டனர்.

திருச்சி

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி யானைகளுக்கு உணவு, பழங்கள் படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இறைவழிபாடு மட்டுமின்றி யானைகளின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் உணர்த்தும் விதமாக விழா நடைபெற்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story