பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது
கோவை பீளமேட்டில் பெண் கொலையில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவை பீளமேட்டில் பெண் கொலையில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பெண் கொலை
கோவை பீளமேடு சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (வயது 41). இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
ஜெகதீஸ்வரி தினமும் தனது மகளை பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்று விட்டு வருவது வழக்கம்.
அவர், கடந்த 28-ந் தேதி மாலையில் மகளை அழைக்க பள்ளிக் கூடத்துக்கு செல்ல வில்லை. இதனால் அவருடைய மகள், பள்ளி யில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று பார்த்தார்.
அங்கு படுக்கை அறையில் தனது தாய் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜெகதீஸ்வரி அணிந்திருந்த 5¾ பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது.
பட்டப்பகலில் பெண் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படைகள் அமைப்பு
இந்த கொலை தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் (தெற்கு) சண்முகம் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசு, கணேஷ்குமார், செந்தில்குமார், கார்த்திகேயன் மற்றும் போலீசார் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அவர்கள், ஜெகதீஸ்வரியின் செல்போனை கைப்பற்றி அவர் யாருடன் எல்லாம் பேசி உள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்க ளை சேகரித்தனர்.
சந்தேகத்தின் பேரில் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனாலும் கொலையாளியை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
இதைத்தொடர்ந்து கொலை நடைபெற்ற சேரன்மாநகர், பீளமேடு, அவினாசி ரோடு ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் சில முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
இதில் கொலை நடைபெற்ற வீட்டில் இருந்து வெளியேறும் நபர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
சூப் கடைக்காரர்
இதில் அந்த பெண்ணை கொலை செய்தது கோவை ராமநாத புரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த மோகன் ராஜ் (33) என்பதும், அவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜ் சேரன் மாநகர் பாலாஜிநகர் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது அவருக்கு ஜெகதீஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். மேலும் அடிக்கடி நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர்.
கள்ளக்காதல்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்ராஜ், கோவை ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதிக்கு குடி பெயர்ந்தார். அதன்பிறகும் மோகன்ராஜ்க்கும், ஜெகதீஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்தது. அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வந்தனர்.
இதனிடையே ஜெகதீஸ்வரிக்கு வேறு சிலருடன் தொடர்பு இருந்தது மோகன்ராஜ்க்கு தெரியவந்தது. இதனால் மோகன்ராஜ், ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்டு வேறு நபர்களுடன் பழக கூடாது என்று எச்சரித்ததாக தெரிகிறது. அதை மீறி ஜெகதீஸ்வரி மற்றவர்களுடன் பழகி வந்தார்.
இது பிடிக்காத மோகன் ராஜ், ஜெகதீஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெகதீஸ்வரியை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.