பூ வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி


பூ வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி
x

பூ வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சகோதரர், வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வெள்ளாலங்காடு பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மகன் பாஸ்கரன். சிங்கப்பூரில் பூ வியாபாரம் செய்து வரும் இவர், அங்கு தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தஞ்சை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெருமகளூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எனக்கு சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த வங்கி கணக்கின் மூலம் பணத்தை சேமித்து வந்தேன். இந்த நிலையில் எனது சகோதரர் தண்டபாணி, பார்த்தசாரதி மற்றும் வங்கிமேலாளர் ஆகியோர் உதவியுடன் என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மோசடி செய்யப்பட்ட எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஸ்கரனின் சகோதரர் தண்டபாணி, பார்த்தசாரதி, வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story