விவசாயிகள் நடைபயணம்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஆனைமலை நல்லாறு என்ற இடத்தில் அணையை கட்டி நீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று கோவை-திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றிக்தரக் கோரி திருப்பூர் அருகே அருள்புத்தில் இருந்து நம்ம நல்லாறு என்ற நடைபயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தொடங்கினர். இந்த நடை பயணம் பொங்கலூர், குண்டம், குடிமங்கலம் வழியாக சென்று நாளை (திங்கட்கிழமை) உடுமலை சென்றடைகிறது. இந்த நடைபயணத்ைதை பி.ஆர். நடராஜன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது " தமிழக அரசு கேரளா அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.