முன்னாள் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவு தினம்


முன்னாள் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவு தினம்
x

தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 52-வது ஆண்டு நினைவுநாள் தூத்துக்குடியில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி லட்சுமி மகால் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் உருவப்படத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளருமான கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் தலைவர் முத்துக்குட்டி, அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story