போலி விதை என்று விவசாயி குற்றச்சாட்டு


போலி விதை என்று விவசாயி குற்றச்சாட்டு
x

சுரைக்காய் போல் காய்த்த சாம்பார் பூசனிக்காய் - போலி விதை என்று விவசாயி குற்றச்சாட்டு

திருப்பூர்

காங்கயம்

சிவன்மலை பகுதியை சேர்ந்தவர்பூவேந்திரன்..சிவன்மலை அடுத்துவேலாயுதம் பாளையம்பகுதியில் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் பூசனிக்காய் விதைகளை பயிரிட்டு அதை உழவர் சந்தை மற்றும் சந்தையில் விற்பனை செய்தும் வந்துள்ளார். நாளை கொண்டாடப்படும் ஆயூதப்பூஜைக்கு விற்பனைக்காக கடந்த செப்டம்பர் மாதம் பூசனிக்காய் விதைகளை வாங்கி தன் நிலத்தில் பயிரிட்டுள்ளார்.இதற்கான விதைகளை கொடுவாய் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்சில் வாங்கி உள்ளார். விதைகளை பயிரிட்டு 60 நாட்களுக்குள் மகசூல் அறுவடைக்கு வரும் என்ற நிலையில் 90 நாட்கள் ஆகியும் காய்கள் காய்க்கவில்லை என விவசாயி குற்றம் சாட்டியுள்ளார். 1 ஏக்கர் விவசாய நிலத்தில் 20 டன் பூசனிக்காய் காய்த்திருக்க வேண்டும் ஆனால் 2 டன் மட்டுமே மகசூல் ஆகியுள்ளதாகவும் காய்த்த பூசனிக்காயானது சுரைக்காய் போன்று இருந்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார். காய்த்த பூசனிக்காய்களை சந்தை விற்பனைக்கு எடுத்து சென்றாலும் சரியான எடை இல்லை எனவும், சுரைக்காய் போல் நீண்டும் இருந்ததால் வியாபாரம் ஆகவில்லை எனவும், தான் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை அடுத்து விவசாயி தான் பயிரிட்ட விதை போலி விதைகள் என சந்தேகித்துள்ளார். மேலும் விதைகள் விற்ற தனியார் ஏஜென்சி ஊழியரிடம் நேரில் வந்து பயிர்களை ஆய்வு செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் தனியார் ஏஜென்சி மற்றும் ஏஜென்சிக்கு விற்பனை செய்த பிரதிநிதி ஆகியோரிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை மேலும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறுகிறார். முறையான பதில் கிடைக்கவில்லை என்பதால் 80 ஆயிரம் ரூபாய் விதைக்கான முதலீட்டையும் மற்றும் 2 லட்சம் ரூபாய் வரையிலான மகசூல் லாபத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் விதை ஆய்வு துறை ஆகிய துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு விதை விற்பனை செய்த தனியார் ஏஜென்சிடம் இருந்து இலப்பீடு பெற்று தர வேண்டும் என கூறினார்.


Next Story