திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் காலமானார்


திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் காலமானார்
x

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சென்னை,

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த மஸ்தான் 1995 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராக இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை காரில் ஊரப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார்.

மஸ்தான் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story