முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் காலமானார்..!


முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் காலமானார்..!
x

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

கோவை,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் காலமானார். உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 74.

அவரது உடல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வால்பாறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோவை தங்கம். அதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2021ஆம் ஆண்டில் கோவை தங்கம் திமுகவில் இணைந்தார்.


Next Story