முன்னாள் எம்.எல்.ஏ. வயலில் சொட்டுநீர் பாசன வயர்கள் திருட்டு; ஒருவர் கைது


முன்னாள் எம்.எல்.ஏ. வயலில் சொட்டுநீர் பாசன வயர்கள் திருட்டு; ஒருவர் கைது
x

முன்னாள் எம்.எல்.ஏ. வயலில் சொட்டுநீர் பாசன வயர்கள் திருட்டு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள வயலில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி தண்ணீர் பாய்ச்சுவதற்காக வைத்திருந்த சொட்டுநீர் பாசன வயர்கள் 6 பண்டல்கள் திருடுபோனது. இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். இதில் கங்கவடங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் சேகர்(48), கலியபெருமாளின் மகன் செந்தில், நெல்லிதோப்பு கிராமத்தை சேர்ந்த பிரபு ஆகியோர் வயர்களை திருடியது தெரியவந்தது. இதில் சேகரை கைது செய்த போலீசார், மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் 4 பண்டல்கள் சொட்டு நீர்ப்பாசன வயர்கள் மீட்கப்பட்டது.


Next Story