விருத்தாசலம் அருகே ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய முன்னாள் எம்.எல்.ஏ. மகனின் ஆதரவாளர் கைது


விருத்தாசலம் அருகே        ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய முன்னாள் எம்.எல்.ஏ. மகனின் ஆதரவாளர் கைது
x

விருத்தாசலம் அருகே ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய முன்னாள் எம்.எல்.ஏ. மகனின் ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

முன்னாள் எம்.எல்.ஏ. மகன்

விருத்தாசலம் அடுத்த மணவாள நல்லூரை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன் மகன் இளையராஜா(வயது 45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் மனைவி மங்கையர்கரசிக்கும் தேர்தல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி தனது வயலில் நின்ற இளையராஜாவை ராஜசேகாின் மகன்கள் ஆடல் அரசு, புகழேந்திராஜா உள்ளிட்டோர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த இளையராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடல்அரசு, புகழேந்திராஜா உள்பட 9 பேரை கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ் சேதம்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பதிவு செய்யப்படாத புதிய ஆம்புலன்சை மர்ம நபர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் இளையராஜாவின் ஆதரவாளரான மணவாளநல்லூரை சேர்ந்த சேரன் மகன் ராஜராஜன்(24) என்பவர் ஆம்புலன்சை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story