கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்


கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
x

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காங்கயம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருப்பூர்

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காங்கயம் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

காங்கயம் அருகே உள்ள பவவதிபாளையம் பி.ஏ.பி. காங்கயம்-வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று உண்ணாவிரதம் காங்கயம்-வெள்ளகோவில் ரோட்டின் முன்பு நடந்தது. போராட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பி.ஏ.பி. தொகுப்பு அணகளின் காலாவதியான ஷட்டர் மற்றும் உபகரணங்களை மாற்ற வேண்டும். திருமூர்த்தி அணைக்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டும். பி.ஏ.பி. நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும். கால்வாய் சீரமைப்பை நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் உள்பட 9 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் பிற பகுதிகளில் உள்ளது போல் சமச்சீர் பாசனமாக மடைகளுக்கு 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். சுற்றுகளை அதிகப்படுத்தி தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும். இனிமேலும் பி.ஏ.பி.பாசன பகுதியில் செயற்கை வறட்சியை உருவாக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் நடந்தது.

வாபஸ் பெற மாட்டோம்

போராட்டத்தை தொடர்ந்து சங்க ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி கூறும்போது "எங்களது கோரிக்கையை நிறைவேற்றாத தமிகழ அரசை கண்டித்தும், கோர்ட்டு தீர்ப்புகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோாம் என்றார்.


Related Tags :
Next Story