விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்,

தாராபுரத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆாப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தலைவர் சண்முகசுந்தரம் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழக சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லகவுண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். பி.ஏ.பி. வாய்க்காலுக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16-ந் தேதி தாராபுரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்றுகூறி போலீசார் விவசாயிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு. விவசாயிகளை தாக்கியதாகவும், அதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஈஸ்வரன் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஆாப்பாட்டத்தில் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.



Related Tags :
Next Story