கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
முத்தூர்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டியில் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு பொறுப்பு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைவர் எஸ்.பெரியசாமி, செயலாளர் கி.வே.பொன்னையன், பொருளாளர் எம்.வி.சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19- ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கீழ்பவானி பாசன கடைமடை பகுதியான மங்களப்பட்டியில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் சங்க கூட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, சங்கம் எதிர்கொண்டுள்ள வழக்குகளை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர் மொஞ்சனூர் சதாசிவம், கூட்டமைப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் செங்கோட்டு வேலுமணி மற்றும் பாசன சபை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.