பட்டுக் கூடு உற்பத்தி விவசாய சங்க கூட்டம்


பட்டுக் கூடு உற்பத்தி விவசாய சங்க  கூட்டம்
x

பட்டுக் கூடு உற்பத்தி விவசாய சங்க கூட்டம்

திருப்பூர்

அவினாசி

திருப்பூர் வடக்கு மாவட்ட பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகளின் விழிப்புணர்வு கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எம்.செல்வராஜ், மாநில செயலாளர் என்.பொன்னுசாமி, மாநில பொருளாளர் வி.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகளுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய மாநில அலுவலர்கள் கள ஆய்வு செய்து உடனடியாக தொழில்நுட்பம் கிடைக்கும் படி செய்ய வேண்டும். அங்காடிகளில் விற்பனை செய்த பட்டுகூடுகளுக்கு உடனடியாக பணப்பட்டு செய்ய வேண்டும்.இந்த ஆண்டு அறிவித்த காப்பீட்டு திட்டத்தின் அனைத்து இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முட்டை மற்றும் இளம் புழுக்கள் சார்ந்த பிரச்சனைகளால் விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் இந்த பாதிப்புகளை சரி செய்ய பட்டு வளர்ச்சி துறை துரிதநடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆன்லைன் ஏலம் முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-------------------


Related Tags :
Next Story