மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் கையில் கரும்புடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் கையில் கரும்புடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் கையில் கரும்புடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூடப்படும் அபாயம்
மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மிகவும் பழமையானதாகும். திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இந்த சர்க்கரை ஆலை சமீப காலங்களாக நலிவடைந்து வருகிறது. எந்திரங்கள் பழுது, நிர்வாகக் குளறுபடி, அதிகாரிகள் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் நஷ்டத்தை சந்திக்கும் ஆலை மூடப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சர்க்கரை ஆலை முன் கையில் கரும்புடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பாளர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத்தலைவர் வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புனரமைப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை காப்பாற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.கரும்பு விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க் கடன் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.ஆலையை முழுமையாக புனரமைத்து இடைநிற்றல் இல்லாமல் முழுமையாக இயங்கவும், விவசாயிகள் விளைவித்த கரும்பை முழுமையாக அரவை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை புனரமைப்புக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.