வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வீ. மேட்டுப்பாளையம்
வீ மேட்டுப்பாளையம் அருகே பழனிகவுண்டன் வலசை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் மகேஷ்குமார் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர் தாயார் சரோஜா உடன் வசித்து கொண்டு விவசாயம் பார்த்து வந்தார். மனைவி பிரிந்த ஏக்கத்தில் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.
சம்பவத்தன்று தாயார் சரோஜா தோட்டத்திற்கு சென்று விட தனியாக இருந்த மகேஷ்குமார் தனது வீட்டு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தோட்டத்தில் இருந்து வந்து பார்த்த தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து மகேஷ்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மகேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி விசாரணை நடத்தி வருகிறார்