ஈரோட்டில் கண்டெடுக்கப்பட்ட17-ம் நூற்றாண்டு கல்சிற்பம்அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு


ஈரோட்டில் கண்டெடுக்கப்பட்ட17-ம் நூற்றாண்டு கல்சிற்பம்அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
x

ஈரோட்டில் கண்டெடுக்கப்பட்ட 17-ம் நூற்றாண்டு கல்சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள புதர் பகுதியில் கல்சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நினைவுத் தூண் சிற்பம் என்பதை ஈரோடு அருங்காட்சியக காப்பாட்சியர் பா.ஜென்சி கண்டறிந்தார். இந்த சிற்பத்தை, அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரனிடம் காப்பாட்சியர் ஜென்சி மனு அளித்தார். அதன்பேரில் மாநகராட்சி ஆணையாளர் அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து, நினைவுத்தூண் சிற்பம், அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து காப்பாட்சியர் பா.ஜென்சி கூறும்போது, 'நினைவுத்தூண் சிற்பம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் மூலம் இந்த சிற்பம் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்' என்றார்.


Next Story