கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால இரும்பு பொருட்கள்


கீழடி அகழாய்வில் கிடைத்த  பழங்கால இரும்பு பொருட்கள்
x

கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

சிவகங்கை

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாசி மணிகள், கண்ணாடி பாசிமணிகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், பழங்கால செங்கல், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய், சிறுவர்கள்-பெண்கள் விளையாடும் சில்லு வட்டுகள், மனித உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் ஆகியவை கண்டறியப்பட்டன. தொடர்ந்து அகழாய்வுக்காக குழிகளில் தோட்டப்பட்ட போது, நேற்று பழங்கால இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கிடைத்த 3 இரும்பு பொருட்களும் 200 கிராம் எடை கொண்டது என தெரிய வருகிறது. இதன் மூலம் பண்டைய காலத்திலேயே தமிழர்களிடம் இரும்பு பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் இருந்திருக்கிறது.


Related Tags :
Next Story