கருப்பர்-முனியன் கோவிலில் ஆடிப்படையல் விழா
கருப்பர்-முனியன் கோவிலில் ஆடிப்படையல் விழா
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி பருகுப்பட்டி சாலையில் உள்ள வாழைதோப்பில் கருப்பர், முனியன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் தேதியில் சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதான விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் 12-வது ஆண்டாக ஆடி படையல் விழா நடைபெற்றது. முன்னதாக கருப்பர், முனியன் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதான கூடத்தில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த அன்னத்திற்கு தீபாராதனை கட்டப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வாழைத்தோப்பு வளாகத்துக்குள் இலை போட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 2,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story