ரூ.46 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா


ரூ.46 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா
x

ரூ.46 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி, பண்டாரவாடை, போலகம் ஊராட்சிகளில் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளுக்கும், இடையாத்தங்குடி, அம்பல் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழலகம் கட்டுவதற்கும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமருகல் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசெங்குட்டுவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story