புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா


புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா
x

சேரன்மாதேவி அருகே புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியன் திருவிருத்தான்புள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டங்காடு கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார் அடிக்கல் நாட்டினார். தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கணேஷ்குமார் ஆதித்தன், சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கணேசன், சேரன்மாதேவி நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், பொன்லட்சுமி, பொறியாளர் பாக்கியராஜ், கூனியூர் ஊராட்சி தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சீவலமுத்து என்ற குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், சேரன்மாதேவி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன், சேரன்மாதேவி பேரூராட்சி துணைத்தலைவர் பால்மாரி, திருவிருத்தான்புள்ளி ஊராட்சி துணைத்தலைவர் மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவிருத்தான்புள்ளி ஊராட்சி தலைவர் இளையபெருமாள் நன்றி கூறினார்.

சேரன்மாதேவி யூனியன் அலுவலகத்தில் வைத்து, சேரன்மாதேவி, பாப்பாக்குடி, அம்பை ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாற்றத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி திட்ட அலுவலர் சுமதி (உட்கட்டமைப்பு), சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், பொன்லட்சுமி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் 30 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், 7 பேருக்கு சக்கர நாற்காலியும், 3 காதொலி கருவியும், 19 மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரமும், 4 செல்போன்களும் வழங்கப்பட்டன. முகாமில் வங்கி கடனுதவிக்காண விண்ணப்பம் மற்றும் தமிழக முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


Next Story