ஓதுவார் பயிற்சி பள்ளி கட்ட அடிக்கல் நாட்டு விழா


ஓதுவார் பயிற்சி பள்ளி கட்ட அடிக்கல் நாட்டு விழா
x

நெல்லையில் ரூ.1.52 கோடியில் ஓதுவார் பயிற்சி பள்ளி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது

திருநெல்வேலி

தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி நெல்லையில் ஓதுவார் பயிற்சி பள்ளி அமைக்கப்படுகிறது. இதற்காக ஓதுவார் பயிற்சி பள்ளி கட்டுவதற்கு ரூ.1.52 கோடி ஒதுக்கீடு செய்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.

இதையொட்டி நெல்லையப்பர் கோவிலின் உப கோவிலான குறிச்சி சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒதுவார் பயிற்சிப்பள்ளி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசில்லா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story
  • chat