மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 11 Jun 2023 12:30 AM IST (Updated: 11 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தலைவன் கோட்டை கிராமத்தில் ஒன்றிய நிதியிலிருந்து ரூ.20 லட்சம் செலவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து தலைவன்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு 500 தென்ன மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

அதில் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், புளியங்குடி நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான அந்தோணிச்சாமி, தலைவன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவி சர்மிளா, துணைத் தலைவர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story