ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால் ஓடைக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால் ஓடைக்கு அடிக்கல் நாட்டு விழா
x

பாளையங்கோட்டையில் ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால் ஓடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ரகுமத் நகர் பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்கும் வகையில் ரகுமத் நகர் 18, 19, 20, 21, 22, 23 ஆகிய தெருக்களில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கவுன்சிலர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், கவுன்சிலர் பவுல்ராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பைஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ரகுமத் நகர் 60 அடி சாலையை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.


Next Story