ரூ.2 கோடியில் முடி காணிக்கை மண்டபம் கட்ட அடிக்கல்


ரூ.2 கோடியில் முடி காணிக்கை மண்டபம் கட்ட அடிக்கல்
x

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ரூ.2 கோடியில் முடி காணிக்கை மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

கரூர்

கரூர் தாந்தோணிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெறும். இந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் முடி காணிக்கை மண்டபம் ரூ.2 கோடியே 9 லட்சத்தில் கட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில், கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான நந்தகுமார், உதவி ஆணையர் ஜெயதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story