தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர்பசுபதிபாண்டியன் நினைவு தினம்


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர்பசுபதிபாண்டியன் நினைவு தினம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியன் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியன் நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நேற்று காலையில் தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியில் உள்ள பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர். காலையில் தமிழ்நாடு தேவேந்திர வேளாளர் குல கூட்டமைப்பு மாநில தலைவர் பார்வதி தலைமையில் பூஜை நடந்தது. தொடர்ந்து வக்கீல் ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கலைவேந்தன், மண்டல செயலாளர் தமிழ் இனியன், மாவட்ட செயலாளர்கள் கதிரேசன் (வடக்கு), முரசு தமிழப்பன் (தெற்கு), இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் விமல் வங்காளியார் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. முக்கிய சாலைகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.


Next Story