கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.ராமசாமி பிறந்தநாள் விழா


கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.ராமசாமி பிறந்தநாள் விழா
x

கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.ராமசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.ராமசாமியின் 93-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவருடைய முழு உருவ சிலைக்கு எம்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன், இயக்குனர் ராஜமாணிக்கம் மற்றும் ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து பணிபுரியும் அனைவருக்கும் இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. பின்னர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு பேனா இலவசமாக வழங்கப்பட்டது.

1 More update

Next Story