4 மாட்டு வண்டிகள் பறிமுதல்


4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

திருவோணம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு தாலுகாவுக்கு உட்பட்ட நெய்வேலி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆற்றுப்படுகைகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.போலீசாரின் இந்த ரோந்து பணியின் போது, வேளாம்பட்டி காளியம்மன்கோவில் தெரு அருகே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்தி வந்தவர்கள் மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசாரை கண்டதும் தப்பிஓடி தலைமறைவான இடையாத்தி பகுதியை சேர்ந்த மலையப்பன், துரை, முத்துசாமி, பெரியதம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story