நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம்


நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 7 Oct 2022 7:45 PM GMT (Updated: 7 Oct 2022 7:45 PM GMT)

செம்பட்டி, பழனி ஆகிய பகுதிகளில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமா நடைபெறுவதை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த காமலாபுரத்தில் இருந்து மூலச்சத்திரம் வரையிலும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி வழியே மடத்துக்குளம் வரையிலும் நான்குவழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் பாலங்கள், அமைத்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில் பழனி அருகே கோதமங்கலம், தாழையூத்து, புஷ்பத்தூர், வயலூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் விசாகன், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோதமங்கலம் பகுதியில் அணுகுசாலை அமைக்கவும், தாழையூத்து சண்முகநர், புஷ்பத்தூர் பகுதியில் நிலம் எடுப்புக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


இதேபோல் செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம் கிராம பொதுமக்கள், விவசாயிகள் தங்களுக்கு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறினர்.


இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் சேக்முகைதீன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் கோவிந்தசாமி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், எஸ்பாறைப்பட்டி ஊராட்சி தலைவர் பாலாஜி, அக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லட்சுமி சக்திவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



Next Story