கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்


கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:01 AM GMT)

கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோயை தடுப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு நேற்று முதல் வருகிற 14-ந்தேதி வரை 2 வாரத்திற்கு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாகை மாவட்டத்திற்கு 1.9 லட்சம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம். இந்த தகவலை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.


Related Tags :
Next Story